தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துரைவைகோவின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்? காரணம் என்ன? - congress executives boycott meeting - CONGRESS EXECUTIVES BOYCOTT MEETING

Pudukkottai Congress: நாடாளுமன்றth தேர்தலில் வெற்றி பெற்றதற்காக புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை அவமதிப்பதாகக் கூறி கூட்டத்தை அக்கட்சியினர் புறக்கணித்தனர்.

துரை வைகோ
துரை வைகோ (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 4:10 PM IST

புதுக்கோட்டை:நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையான ஒரு கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவியது.

அந்த வகையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிட்டார். அவர் வேட்பாளாரக அறிவிக்கப்பட்டது முதல், அவரை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுகவினர் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இதனிடையே, திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய துரை வைகோ, தங்கள் கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்றும், இல்லையென்றால் தேர்தலில் இருந்து ஒதுங்கி கொள்வதாகவும் கண்ணீர் மல்க பேசினார். துரை வைகோவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

அதனைத் தொடர்ந்து, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட துரை வைகோ வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள புதுக்கோட்டைக்கு வந்த துரை வைகோவிற்கு மதிமுக தொண்டர்கள், கூட்டணி கட்சிகளான திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனிடையே, துரைவைகோவிற்கு வரவேற்பிற்காக திமுக மற்றும் மதிமுக கொடிகள் மட்டுமே வழிநெடுக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடியை ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை என்றும், இது தேசியக் கட்சியை அவமதிக்கும் செயலாக பார்க்கப்படுவதாகவும், தங்கள் கட்சியின் கொடியைப் பயன்படுத்தவில்லை என்றாலும் தங்களது கட்சியின் துண்டை தங்களுக்கு அணிவித்து, இதனைச் சுட்டிக் காண்பிக்கிறோம் என பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் நிர்வாகி ஈடிவி பாரத்திடம் கூறினார். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர்.

இதையும் படிங்க:"2026-ல் அண்ணாமலை எங்கே போட்டியிட்டாலும் தோல்வியடைவார்" - மாணிக்கம் தாகூர் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details