தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் பயங்கரம்: மனைவியுடன் தகராறு; தடுக்க வந்த மாமியாரை அடித்துக்கொன்ற மருமகன்! - mother in law murder - MOTHER IN LAW MURDER

திருப்பத்தூரில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்க வந்த மாமியாரை மருமகன் மண்வெட்டியால் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட காஞ்சனா, மருமகன் முருகேசன்
கொலை செய்யப்பட்ட காஞ்சனா, மருமகன் முருகேசன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 12:43 PM IST

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டத்தில் மாமியாரைக் கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார். மனைவியுடன் ஏற்பட்ட மோதலைத் தடுக்க வந்ததால் ஆத்திரமடைந்து மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி காஞ்சனா (57). இவர்களது மகள் வரலட்சுமியும், அதே பகுதியைச் சேர்ந்த குமரேசனும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

குடியால் கெட்ட குடும்பம்:

மேலும், இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. குமரேசன் செல்போன் கடை நடத்தி வந்த நிலையில், ஒரு வருடமாக அதனை விட்டுவிட்டு குடி போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக குமரேசன் தனது மாமியார் வீட்டிலேயே தங்கி வசித்து நிலையில், தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த சூழலில், நேற்றிரவு வழக்கம்போல் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குமரேசனுக்கும், அவருடைய மனைவி வரலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மாமியார் அடித்துக் கொலை:

இதனால் ஆத்திரத்தில் இருந்த குமரேசன், தகராறை முடிவுக்குக் கொண்டுவர முயன்ற மாமியார் காஞ்சனாவை, வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பின் மண்டையில் பலமாகத் தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த காஞ்சனாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

காஞ்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை:

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து குமரேசனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறை தடுக்கச் சென்ற மாமியாரை, மருமகன் மண்வெட்டியால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

  1. நேற்று கைது இன்று என்கவுண்டர்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் அதிரடி..!
  2. நடைபயிற்சி சென்ற இளைஞர் அரிவாளால் வெட்டி கொலை..முன்விரோதம் காரணமா?

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details