தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குவைத் தீ விபத்து; தந்தையின் நிலை குறித்து அறிய ஆட்சியரிடம் மனு அளித்த மகன்! - Kuwait fire accident - KUWAIT FIRE ACCIDENT

Tamilians died in Kuwait fire accident: குவைத்தில் நடந்த தீ விபத்தில் திருச்சியைச் சேர்ந்த ராஜு என்பவரின் நிலைமையை உறுதிப்படுத்தும் படி அவரது மகன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

குவைத் தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படும் நபர்
குவைத் தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படும் நபர் (Photo credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 7:45 PM IST

திருச்சி: குவைத் நாட்டின் தெற்கில் இருக்கும் மங்காஃப் (Mangaf) எனும் பகுதியில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளர்கள் தங்கி இருந்த ஆறு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், இந்தியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்ததாகக் கூறப்படும் நபரின் மகன் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் நவல்பட்டு அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த எபினேசர் என்பவரின் மகன் ராஜு (54), குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் கனரக ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததுள்ளார். இவரும் இந்த தீ விபத்தில் சிக்கியதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இருப்பினும், அவரது நிலை குறித்து சரியான விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அவரது மகன் குணசீலன் என்பவர், தனது தந்தையின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை தெரிவிக்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

இது குறித்து அவரது மகன் குணசீலன் கூறியதாவது, “எனது தந்தை ராஜு கடந்த ஆறு வருடங்களாக குவைத்தில் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முதல் எனது தந்தையை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின்னர், அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டபோது, அவர் குவைத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் அளித்தனர். தொடர்ந்து, அரசுத் தரப்பில் அளித்த தூதரக உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அவர்கள் எனது தந்தை குறித்த தகவலைப் பெற்றுக் கொண்டு விரைவில் தகவல் தெரிவிப்பதாகக் கூறினர்.

தொடர்ந்து, தூதரகத்தை அணுகிய போது, எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்றும், தந்தையின் நிலை குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனது தந்தை உயிருடன் உள்ளாரா, இல்லையா என்பது தெரியாத நிலை எங்களுக்கு உள்ளது.

மேலும், இந்த நிலை வீட்டில் உள்ளவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எனது தந்தை ராஜுவின் நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:குவைத் தீ விபத்து; 5 தமிழர்கள் உயிரிழப்பா? அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details