தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்ற தாயுடன் இருந்த மகனுக்கு விபரீதம்.. திருமணத்துக்கு மீறிய உறவினால் சோகம்! - Tirupathur mother Suicide - TIRUPATHUR MOTHER SUICIDE

Tirupathur Extra marital affair: திருப்பத்தூரில் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்ததாக ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்ற தாயுடன் இருந்த அவரது குழந்தை உயிரிழந்துள்ளார்.

Tirupathur
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 5:29 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பாம்புகாரன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் பீகாரில் ராணுவத்தில் நாயக் என்ற பொறுப்பில் 14 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு வினோதினி என்பவருடன் திருமணமாகி 4 வயதில் கிஷோர் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், கணபதி அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி சத்யா (28) என்பவருடன் திருமணத்துக்கு மீறிய தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் கணபதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது கணபதிக்கும், அவருடைய மனைவி வினோதினிக்கும் இடையே நான்கு நாட்களாக வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கு சத்யா தான் காரணம் என வினோதினியும், அவருடைய தாயாரும் சேர்ந்து நேற்று இரவு சத்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், இன்று காலை மீண்டும் கணபதி மற்றும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வினோதினி, தனது மகன் கிஷோரை தூக்கிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், திருப்பத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சில மணிநேரம் நேரம் போராடி வினோதினியை பத்திரமாக மீட்டனர். அதற்குள் நான்கு வயது சிறுவன் கிஷோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பின்னர், தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு, திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்த சத்யாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, அவரை மீட்ட குடும்பத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சத்தியா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமணம் தாண்டிய உறவு.. கணவனை ஏமாற்றி பணம் பறிப்பு..நாதக நிர்வாகியின் பலே நாடகம்!

ABOUT THE AUTHOR

...view details