தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள நாச்சியார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள எட்டு குளங்களை அரசு மீட்டு தூர் வாரிட வேண்டுமென கடந்த எட்டு ஆண்டுகளாக, சமூக ஆர்வலர் கே.கோவிந்தவல்லப பந்த் என்பவர் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்திகளில் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளார்.
மேலும், எட்டு ஆண்டுகளாக எட்டு குளங்களை மீட்க எண்ணற்ற அரசியல் கட்சி தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோரிடமும் அவர் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளார். பல கோரிக்கை மனு அளித்தும் ஆட்சியாளர்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.