சென்னை:வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறினாலும் கரையை கடக்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னம், தற்போது 3.கி.மீ, வேகத்தில் மெதுவாக நகர்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் வாபஸ்:புயல் சின்னம் மெதுவாக நகர்வதையடுத்து, கனமழை தொடர்பாக கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று காலை 8:30 மணியிலிருந்து 5:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 47 மில்லிமீட்டர் மழையும், காரைக்கால் மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முறையே 30 மில்லிமீட்டர,் 18 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது.
கடலோர காவல் படை எச்சரிக்கை:வங்கக்கடல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது கடலில் உள்ள மீன்பிடி படகுகள் விரைவில் கடலுக்கு திரும்புமாறு கடலோர காவல் படை சார்பில் அதன் கப்பல்கள், வானூர்திகள், ரேடார் நிலையங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.