சென்னை: சென்னை ஆலந்தூர் அருகே நேற்று மாலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிண்டியில் இருந்து ஆலந்தூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். அதில் வந்த இருவர் வாகனத்தை நிறுத்தாமல் போலீசாரை பார்த்தவுடன் வாகனத்தை திருப்பி வேகமாக செல்ல முயற்சி செய்தனர். இதைக் கண்ட போக்குவரத்து போலீசார் சுதாரித்துக் கொண்டு அந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
அதில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்யும்போது, அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பரங்கிமலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் விசாரணையில் இருவரும் மதுரை சேர்ந்த கருப்பு (28) மற்றும் ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த வீரமணி (27) என்று தெரிய வந்தது. இதில் கருப்பு என்பவர் மதுரையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சென்னையில் உள்ள பல இடங்களில் பிளாட்பார்மில் தங்கி விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:தாக்குதலுக்கு உள்ளான கட்சி நிர்வாகிக்கு ஆறுதல் கூற சென்ற மாவட்ட செயலாளர் மீது வழக்கு... பாமக நிறுவனர் ராமதஸ் கண்டனம்!