சேலம்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்சிசி திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. அந்த முகாமில், போலியான பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பயிற்சியாளர் நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவை நியமனம் செய்து, 15 நாளில் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், நேற்று முதல் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டர்.
இதற்கிடையே தற்கொலைக்கு முயற்சித்தை அடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (ஆக.23) காலை 5.30 மணியளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.