தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி முதல்வருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு - Sexual Harassment of Students - SEXUAL HARASSMENT OF STUDENTS

காவல் துறை தரப்பில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் தொடர்பு இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்) (Image Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 5:44 PM IST

சென்னை:கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர், தாளாளருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சிவராமன் கைது செய்யப்பட்டார். மேலும், முகாம் நடந்த தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர்!

ஜாமீன் கோரிய இவர்களின் மனுவை, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே தங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் தொடர்பு இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details