தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் பட்டாசு வெடி விபத்து: ஆலை உரிமையாளர் கைது; இருவர் கவலைக்கிடம்! - fire works godown explosion - FIRE WORKS GODOWN EXPLOSION

Fire Works Godown Explosion : சாத்தான்குளம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்ணன், ராம்குமார், விஜய்
கண்ணன், ராம்குமார், விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 12:55 PM IST

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சிவகாசியில் தயார் செய்யக்கூடிய வெடிகளை குடோனில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

முக்கியமாக திருமணம், கோயில் திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிக்கு இங்கிருந்து பட்டாசுகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று பட்டாசு வைத்திருந்த குடோனில் அதிக சத்தத்துடன் வெடி வெடித்தது.

இதில், இரண்டு அறைகள் வெடித்து சிதறின. அப்போது அங்கு வேலைப் பார்த்து கொண்டிருந்த அரச குளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (21) மற்றும் நாசரேத் பகுதியைச் சேர்ந்த விஜய் (25) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் பலியாயினர்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாத் (20), செல்வம் (21) மற்றும் செந்தூர் கனி (45), முத்து மாரி (41), ஆகிய இரு பெண்கள் என மொத்தம் நான்கு பேர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் அங்கு சென்று உரிய முறையில் சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில் பிரசாந்த், செல்வம் இருவருக்கும் 90 முதல் 95% தீக்காயம் உடலில் இருப்பதால் அபாய கட்டத்தில் உள்ளனர். இருப்பினும் இருவரும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :சாத்தான்குளம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து.. இருவர் உயிரிழப்பு! - fire works godown explosion

ABOUT THE AUTHOR

...view details