தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி தனியார் மீன் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு: 30க்கு மேற்பட்ட பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம்! - ammonia gas leak in fish plant

Ammonia Gas leak in fish processing plant: தூத்துக்குடி மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் 30க்கு மேற்பட்ட பெண்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெண் ஊழியர்
மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெண் ஊழியர் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 7:59 AM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தனியார் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அந்த ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மீன் பதனிடும் ஆலை முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில் அங்கு பணியில் இருந்த தமிழகத்தின் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஐந்து பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் உள்பட 30 பேர் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பெண்கள் அந்த ஆலையின் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் தனியார் மீன் பதன ஆலையில் அமோனியா கேஸ் வெளியாகி, 30 பெண்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:குப்பைக் கூளங்களுக்கு மத்தியில் வாழ்ந்த பெண்கள்.. கோவையில் திடுக்கிடும் சம்பவம்! - women living in garbage

ABOUT THE AUTHOR

...view details