தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வகுமார். இவர் தனது சகோதரர் மற்றும் குடும்பத்தாருடன் உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு, ஆம்னி காரில் சென்று வழிபாடுகளை முடித்து விட்டு, நேற்று சொந்த ஊரான எரசக்கநாயக்கனூருக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது, தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வந்த பொழுது, சீலையம்பட்டி அருகே சாலையின் ஓரம் இருந்த புளியமரத்தில் எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த நாகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில், காரினை ஓட்டி வந்த செல்வகுமார், அவரது மனைவி நாகலட்சுமி, மகள் கோகிலா மற்றும் நாகராஜனின் மனைவி சுதா உள்பட நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.