திருவண்ணாமலை :ஆரணி அடுத்த சீனிவாசபுரம் கிராம், வடுகசாத்து கிராமம் ஆகிய இரு கிராமங்களில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 குழந்தைகளை தெருநாய் கடித்து குதறியதில், ஏழு பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்திச் சென்று கடிப்பது வாடிக்கையாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆரணி அருகே சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மகன் ஜீஸ்னு (7) என்ற சிறுவன் மாலை நேரத்தில் டியூசன் முடித்து விட்டு, வீடு திரும்பும் போது தெருவில் திரிந்த நாயானது சிறுவனை துரத்தி கடித்துள்ளது.
இதையும் படிங்க :யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!
சிறுவனின் கதறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், நாயினை விரட்டி பாதிக்கப்பட்ட சிறுவனை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் நாயானது அருகே உள்ள வடுகசாத்து கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. அங்கு வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 குழந்தைகளை கடித்து குதறி உள்ளது. இவர்களின் கதறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர், நாயை விரட்டி படுகாயமடைந்த 6 குழந்தைகளை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நாய் கடியினால், தற்போது அங்கு 7 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம், உடனடியாக வெறிநாய்களை பிடித்து கருத்தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்