சென்னை:சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 22வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு! - ED
Ex Minister Senthil balaji case: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் 4 தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published : Feb 20, 2024, 9:04 PM IST
இதனிடையே, செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் புழல் சிறையிலிருந்து காணொளிக் காட்சி மூலம் பொறுப்பு நீதிபதியான சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி ஆனந்த் முன்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 22வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு - சட்டமன்ற செயலகம் அறிவிப்பு!