தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பாஜக ஆட்சி நாளை முடிவுக்கு வரப்போகிறது” - செல்வப்பெருந்தகை தாக்கு! - SELVAPERUNTHAGAI

Selvaperunthagai slams Modi: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆசியோடு இந்தியாவில் நாளை ஒரு விடியல் பிறக்க இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Selvaperunthagai, Modi Image
செல்வப்பெருந்தகை,மோடி புகைப்படம் (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 2:02 PM IST

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு (Credit - ETVBharat TamilNadu)

இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவடைந்து 101வது பிறந்த நாள் இன்று. அவரது திருவுருவுச்சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம். கலைஞர் என்பவர் ஒரு அடையாளமாக, மனசாட்சியாக இந்த தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

சமூக நீதிக்கு மிகப்பெரிய பாதையை அமைத்தவர். இந்தியாவில் குடிசைகள் இருக்கக் கூடாது என்று இங்கே அடிக்கல் நாட்டினார். பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொடையாக கொடுத்தவர். கொள்கைகளும், கோட்பாடுகளும் நிறைய தேவைப்படுகிறது. நாமெல்லாம் அவற்றை பின்பற்ற வேண்டும்.

பாஜக ஆட்சி நாளை முடிவுக்கு வரப்போகிறது. கலைஞர் கருணாநிதி ஆசியோடு இந்தியாவில் நாளை ஒரு விடியல் பிறக்க இருக்கிறது. அவர் இறந்துவிட்டாலும் அரசியலில் எல்லோரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்” என்றார். பின்னர், தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “இது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு.

அது மோடியின் கருத்து திணிப்பு. 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக்கணிப்பு வந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மோடியோடு கருத்து திணிப்பு, இரண்டு மாதத்திற்கு முன்பு இதை தயார் செய்துவிட்டு இதை செய்திருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கே உள்ளது என்று தேட வேண்டிய நிலைமை உள்ளது. ஒரு உள்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர்களை மிரட்டுகிறார்.

நாளை புதிய விடியல் ஏற்படும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றார். அதனைத் தொடர்ந்து, பாஜக எத்தகனை இடங்களை பிடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “150 இடங்களை மட்டுமே பாஜக பிடிக்கும்” என்றார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் சீண்டல்; சென்னையில் ஐடி ஊழியர் போக்சோவில் கைது - POCSO CASE IN CHENNAI

ABOUT THE AUTHOR

...view details