சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், ராஜீவ் காந்தியின் நினைவு நாள் உறுதிமொழியாக ’பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி’ எடுத்துக் கொண்டனர்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை பேசிய போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும் வழிவகை செய்த மாபெரும் தலைவர் என கூறினார். மேலும், அதிகாரப் பகிர்வு என மாநிலம், மத்தியம் இரண்டுக்கும் இடையில் நல்லுறவு தொடர்வதற்காக பாடுபட்டவர் ராஜீவ் காந்தி என்று கூறியுள்ளார்.