சென்னை: தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நேற்று (நவ.1) சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யை சரமாரியாகத் தாக்கி விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, "த.வெ.க கூட்டம் நடத்துவதற்கு நிறைய நெருக்கடி என்றார்கள். ஆனால், கூட்டம் நடக்கும் இடத்தைப் பார்த்தபின் தான் தெரிகிறது ரெம்ப நெருக்கடி என்று. தம்பி நான் குட்டிக் கதை சொல்லுபவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமே தான் பெரியார், அம்பேத்கர் எல்லாரைப் பற்றியும் படிக்கனும். ஆனா, நாங்க படிச்சி, Phd-ல தீசஸ் சம்பிட் பன்னியிருக்கோம்.
சங்க இலக்கியத்தை இனிமேதான் எங்க இருக்கிறது இலக்கியம் எனத் தேடவேண்டும். ஆனால், சங்க இலக்கியத்தில் வருகிற பாண்டியன், நெடுஞ்செழியனின் பேரனும், பேத்திகளுமடா நாங்கள்!. அது கதையல்ல எனது இன வரலாறு. அன்பு என்றால் அன்பு வெரும் அன்பு அல்ல பேரன்பு. வம்பு என்றால் வம்பு, சாதாரண வம்பு இல்லை உடன் பிறந்தார்களே! கொடிய வம்பு. நீங்கள் வெட்ட அரிவாளைத் தூக்குகிறபோது விழுந்து கும்பிடுகிற ஈனப்பிறப்புகள் அல்ல நாங்கள் என ஆவேசமாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: இன்னும் தகவல் வரல; கேட்டு சொல்றேன் - செந்தில் பாலாஜி பதில்!
தொடர்ந்து பேசிய அவர், "திராவிடம் என்றால் என்ன என்று அவர்களுக்கும் தெரியவில்லை, தமிழ் தேசியம் என்ன என்பது இவர்களுக்கும் தெரியவில்லை. ஆத்துல கால வை இல்லன்னா சேத்துல கால வை. இரண்டிலும் கால் வைத்தால் என்ன அர்த்தம். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று, எங்கள் கண்ணு என்று கூறியதைக் கேட்டு பயந்துவிட்டேன்.
தமிழ் தேசிய அரசியல் பேராசன் மணியரன், ஒன்னு சாம்பார் அல்லது கருவாட்டுக் குழம்பு என்று சொல்லு, கருவாட்டுச் சாம்பார் என்று சொல்லாதே. அதுவேறு இது வேறு. தற்போது காட்டுப் பூனையும், நாட்டுக் கோழியும் ஒன்னா என்கிறார். ஏனென்றால், அண்மையில் வந்த படத்தில் வில்லனும், கதாநாயகனும் ஒரே ஆள் நடித்ததால், திராவிடமும், தமிழ் தேசியமும் வேணும் என்கிறார். 75 வருடம் நிறைவு செய்த திமுகவுக்கே திராவிடம் என்றால் என்னவென தெரியவில்லை.
அடிப்படையே தவறு.. இது கொள்கை இல்லை கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. ஒன்னு சாலையில் அந்த ஓரத்தில் நில்லு. இல்லைனா சாலையில் இந்த ஓரத்தில் நில்லு. நடுவில் நின்றால் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ. எதாவது ஒரு பக்கம் நில்லு. What Bro.. Its very Wrong Bro. நான் கருவிலேயே என் எதிரியை தீர்மானித்துவிட்டு வந்தவன்.
சரக்கு இருக்கு கருத்து இருக்கு அதனால் சத்தமாக பேசுகிறோம். எங்கள் முன்னவர்கள் ஒன்றை தான் கற்று கொடுத்துள்ளார்கள். உண்மையை பேசு. அதை உரக்க பேசு. உறுதியாக பேசு. இறுதி வரை பேசு என்று. இதுதான் எங்கள் கோட்பாடு.