சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படியும் பள்ளிக் கல்வி இயக்ககமும், தொடக்கக் கல்வி இயக்ககமும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
இது தொடா்பாக, பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளி குழந்தைகளின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.
- பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களின் மனநலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்ள கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.
- உடல் ரீதியான தண்டனை தொடர்பான புகார்களை உடனடியாகத் தீர்ப்பதற்கு அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில், உடல் ரீதியான துன்புறுத்தல் தண்டனையை அளிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
- ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளித் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை நிறுவுதல் வேண்டும்.
ஆர்டிஇ (RTE- Right to education) சட்டம் 2009- ன் விதிகளின்படி, உடல் ரீதியான தண்டனை, மனரீதியான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு என வகைப்படுத்தலாம். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி,