டேராடூன் (உத்தராகாண்ட்):தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கல்வி கலாச்சாரம் உள்ளிட்டவற்றை சிறப்பாக சொல்லித்தரும் ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்வில் 8 ஆயிரத்து 96 பேர் பங்கேற்ற நிலையில், அவர்களில் இருந்து 2 ஆயிரத்து 8 பேர் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்வின் மூலம் 992 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் 75 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண் பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தேர்வில் 75 சதவீதம் முதல் 89 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற 325 ஆசிரியர்கள் கடந்த 28 ஆம் தேதி டேராடூன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இன்று தமிழ்நாடு திரும்ப உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று செவ்வாய்கிழமை டேராடூன் நகரத்தில் உள்ள தங்கும் விடுதியில், கனவு ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறையாற்றினார். அப்போது அவர், “வருகின்ற ஜூன் 2024 முதல், EMIS இணையதளத்தில் வருகைப் பதிவு தவிர, ஆசிரியர்கள் வேறு எந்த பதிவினையும் பதிவிட வேண்டியதிருக்காது. மற்ற பதிவுகளுக்கென, பிரத்யேகமாக 14 ஆயிரம் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.