தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - tamil nadu teachers transfer - TAMIL NADU TEACHERS TRANSFER

Tamil Nadu school teacher transfer: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்காக விண்ணப்பித்த கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்கம்(கோப்புப்படம்)
பள்ளிக்கல்வி இயக்கம்(கோப்புப்படம்) (credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 12:48 PM IST

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், முதுநிலை தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 46,810 ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே-2024 மாதம் தொடங்கி, நடத்திட அரசு ஆணை பெறப்பட்டு, கலந்தாய்விற்கான உத்தேச கால அட்டவணை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலமாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொதுமாறுதல் கலந்தாய்விற்கு, முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து வருவதால், பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை மே 25 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் 18,920 விண்ணப்பங்கள், இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும் 9,295 விண்ணப்பங்கள், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 5,814 விண்ணப்பங்கள், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் 1,640 விண்ணப்பங்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 35,669 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 25,711 விண்ணப்பங்கள், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 17,296 விண்ணப்பங்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும் 1,186 விண்ணப்பங்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் 1,452 விண்ணப்பங்கள், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் 176 விண்ணப்பங்கள், உடற்கல்வி இயக்குநர் (நிலை1) மாறுதலுக்கும் 989 விண்ணப்பங்கள், இடைநிலை மற்றும் இதர ஆசிரியர்கள் மாறுதலுக்கும் என மொத்தம் 46,810 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளன.

தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களிலிருந்து ஆக மொத்தம் 82,479 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளன.

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து 16,183 விண்ணப்பங்கள் ஒன்றியத்திற்குள் மாறுதலுக்கும் 6,448 விண்ணப்பங்கள் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 6,185 விண்ணப்பங்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 6,853 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து 27,750 விண்ணப்பங்கள், மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 19,060 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

கால அட்டவணை: இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார்.

அதில், விண்ணப்பம் செய்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூலை மூன்றாம் தேதி வெளியிடப்படும். முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் ஜூலை 4 மற்றும் 5 ம் தேதிகளில் திருத்தம் செய்யலாம். இறுதி முன்னுரிமை பட்டியல் 6ம் தேதி வெளியிடப்படும். 2024-25ம் கல்வியாண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்வு காலை 9.30 முதல் மாலை 6‌ மணி வரை நடைபெறும்.

அரசு, நகராட்சி உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)‌ஜூலை 8 ந் தேதி நடைபெறும்.

அரசு,நகராட்சி உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 9 ந் தேதி நடைபெறும்.

அரசு,நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 10 ந் தேதியும், அரசு,நகராட்சிப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 11 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை நடைபெறும்.

அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 22 ந் தேதியும், அரசு ,நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைம ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 23 ந் தேதியும், அரசு,நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 24 ந் தேதியும், அரசு,நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 25 ந் தேதியும், அரசு,நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 27 ந் தேதியும், அரசு,நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 27 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details