புதுடெல்லி:முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது ஓ.பன்னீர் செல்வம் ரூ. 1.77 கோடி அளவிற்குச் சொத்துக்கள் குவித்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் தமிழக அரசுத் தரப்பில் வழக்கு தொடர்வதற்கான அனுமதி திரும்பப்பெற்றது. இந் உத்தரவை ஏற்று ஓ.பன்னீர் செல்வத்தை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், எஸ் வி என் பாட்டி. ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, சித்தார்த் லுத்ரா, முகுல் ரோஹத்கி மற்றும் எஸ் நாகமுத்து ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இதையும் படிங்க:ஃபெங்கல் புயல் உருவானது! இப்போ 10 கிலோ மீட்டர் வேகம்; கரையை கடக்கும்போது?