தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாமீன் கேட்ட சவுக்கு சங்கர்... நீதிமன்றத்தின் முடிவு என்ன? - SAVUKKU SHANKAR CASE UPDATE - SAVUKKU SHANKAR CASE UPDATE

SAVUKKU SHANKAR BAIL CASE: காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை கோவை நீதிமன்றம் வருகின்ற 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சவுக்கு சங்கர் மற்றும் கோவை நீதிமன்ற வளாக புகைப்படம்
சவுக்கு சங்கர் மற்றும் கோவை நீதிமன்ற வளாக புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 12:43 PM IST

கோயம்புத்தூர்:யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கடந்த 4ம் தேதி தேனியில் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதேசமயம் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் சவுக்கு சங்கருக்கு கையில் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவரை நேரில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் மனுவை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒரு நாள் மட்டும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் இன்று (மே 14) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு போலீசாருக்கு நீதிமன்றம் அளித்துள்ள ஒரு நாள் அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதையடுத்து சவுக்கு சங்கரை போலீசார் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் விவகாரம்: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே-27 வரை ரிமாண்ட்.. திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Felix Gerald Police Custody

ABOUT THE AUTHOR

...view details