தென்காசி:சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த இளைஞரை அரிவாள் வெட்டிய நபரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசராணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணையில், தென்காசி, வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (23). சென்னையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், தென்காசியில் இருந்து சென்னை செல்வதற்காக, சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு நேற்று (டிசம்பர் 9) திங்கட்கிழமை இரவு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்வராஜை அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டவுன் காவல்துறையினர், செல்வராஜை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், செல்வராஜுக்கு வாயில் அரிவாள் வெட்டுப்பட்டுள்ளதால் அவர் பேசுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பகிறது.
ரயில்வே போலீசார் விசாரணை:
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார், செல்வராஜை யார் வெட்டினார்கள்? கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது குறித்து சார்பு துணை ஆய்வாளர் (RPF) வெள்ளத்துரை மற்றும் ரயில்வே போலீஸ் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சமாதானம் ஆகியோர் நேற்று இரவு முதல் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.