சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுக்குள்ளான பதிவாளர் தங்கவேலுவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 2 முறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தங்கவேலுவிற்கு பணி ஓய்வு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனைக் கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்கலைக்கழக நுழைவாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு துணை வேந்தரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், பல்கலைக்கழகங்களில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.
இது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது, "பணி நியமன முறைகேடுகள், சமூக நிதி மறுப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து ஏவியும், அவர் சார்புடைய மக்கள் போராட்டங்களை நடத்தியும், இந்த பல்கலைக்கழக நிர்வாகம் செவி சாய்க்க மறுக்கிறது. கேட்டால் துணைவேந்தர் ஜெகநாதன் இது தன்னாட்சி பெற்ற நிறுவனம் என சொல்கிறார். நான் நினைத்ததைச் செய்வேன். நினைத்ததை முடிப்பவன் நான்.