சேலம்: சேலத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் 44 வயதான ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாச புகைப்படங்களைக் காட்டி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் தலைமறைவாக இருந்த ஆசிரியர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.