சென்னை:ஸைலாக் என்ற சீன நிறுவனத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக பாஜக மகளிர் பிரிவு தேசிய தலைவரும், தற்போதைய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மீது முன்னாள் ரயில்வே ஊழியர் சங்கரநாராயணன் என்பவர் வாட்ஸ் அப், எக்ஸ்(X) மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வீடியோ வெளியிட்டார்.
இது தொடர்பாக பாஜக மகளிர் பிரிவு தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கடந்த 2017ம் ஆண்டு சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், "ஆதாரம் இல்லாமல் போலியான கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தில் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட சங்கரநாராயணன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டது.
இதுபோல, பாஜக நிர்வாகியாக இருந்த பாலசுப்ரமணியன் ஆதித்யன் என்பவரும் கருத்து தெரிவித்ததால், அவர் மீதும் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியாக வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருக்குமரன், அவதூறு பரப்பவே இதுபோன்ற கருத்துக்களை பரப்பியதாக குற்றம் சாட்டினார்.