சென்னை:உயர் கல்வித்துறையின் கீழ் வரும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக செயல்பாடுகள் உள்பட அனைத்தையும் கல்லூரி கல்வி இயக்ககம் கண்காணித்து வருகிறது. மேலும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குனராக திருவாரூரில் உள்ள திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதாவை முழு கூடுதல் பொறுப்பாக நியமித்து உயர் கல்வித்துறை நியமனம் செய்தது. இதனைத்தொடர்ந்து அவர் செயல்பட்டு வந்தார். முதல்முறையாக அரசு கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் சேர்க்கையை முறைப்படுத்தினார். இதையடுத்து அனைத்து சேர்க்கையும் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் இணையதளம் மூலம் நடைபெற்றது.