தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறு ஆண்டுகளில் அதிக கொலைகள்.. தூத்துக்குடி முதலிடம்.. மதுரைக்கு பிறகு இந்த மாவட்டமா? பகீர் தரும் ஆர்டிஐ ரிப்போர்ட்! - highest murders in tamilnadu

highest murder district in tamilnadu: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவலின்படி கடந்த ஆறு ஆண்டுகளில் தூத்துக்குடியில் அதிகளவு கொலை வழக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 7:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை கொலை, கொலை முயற்சி மற்றும் குண்டர் தடுப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவலை சமூக ஆர்வலர் சசிகுமார் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் உள்ள காவல் மாவட்டங்களில் 38 இல் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 5,811 கொலை வழக்குகளும், 9,138 கொலை முயற்சி வழக்குகளும், 5,130 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளன.அந்த வகையில், கடந்த 2018 இல் இருந்து 2024 வரை எந்தெந்த காவல் மாவட்டங்களில் அதிகளவு மேற்கண்ட வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதை பார்க்கலாம்.

கொலை வழக்குகள்:

தூத்துக்குடி: 436, மதுரை: 369, திண்டுக்கல்: 315, நாகப்பட்டினம்: 94, மதுரை மாநகரம்: 224, தருமபுரி: 142, திருப்பூர் மாநகரம் தலைமையிடம்: 121, கீழ்ப்பாக்கம் (சென்னை): 25, பெரம்பலூர்: 70, திருவாரூர்: 134, சிவகங்கை: 197, திருச்சி: 42, திருப்பூர்: 199, கரூர்: 89, ஈரோடு: 191, புதுக்கோட்டை: 194, சிந்தாதிரிப்பேட்டை (சென்னை): 33, அரியலூர் உட்கோட்டம்: 52, ஜெயகொண்டம்: 54, கிருஷ்ணகிரி: 296, கொளத்தூர் (சென்னை): 55, ராணிப்பேட்டை: 71, கோவை: 205, நீலகிரி: 59, சேலம்: 262, சேலம் மாநகரம்: 258, திருநெல்வேலி உட்கோட்டம்: 255, தஞ்சாவூர்: 298, திருவண்ணாமலை: 209, தி. நகர் (சென்னை): 32, மயிலாடுதுறை: 101, தேனி: 222, திருப்பத்தூர் உட்கோட்டம்: 62, திருப்பத்தூர் வாணியம்பாடி: 33, திருப்பத்தூர் ஆம்பூர் உட்கோட்டம்: 25, தென்காசி: 202, திருச்சி தெற்கு: 97, திருநெல்வேலி சிட்டி: 88.

கொலை முயற்சி வழக்குகள்:

தூத்துக்குடி: 947, மதுரை: 496, திண்டுக்கல்: 335, நாகப்பட்டினம்: 158, மதுரை மாநகரம்: 398, தருமபுரி: 95, திருப்பூர் மாநகரம் தலைமையிடம்: 112, கீழ்ப்பாக்கம் (சென்னை): 68, பெரம்பலூர்: 146, திருவாரூர்: 244, சிவகங்கை: 337, திருச்சி: 41, திருப்பூர்: 121, கரூர்: 101, ஈரோடு: 152, புதுக்கோட்டை: 354, சிந்தாதிரிப்பேட்டை (சென்னை): 92, அரியலூர் உட்கோட்டம்: 83, ஜெயகொண்டம்: 85, கிருஷ்ணகிரி: 165, கொளத்தூர் (சென்னை): 57, ராணிப்பேட்டை: 63, கோவை: 220, நீலகிரி: 42, சேலம்: 179, சேலம் மாநகரம்: 452, திருநெல்வேலி உட்கோட்டம்: 1161, தஞ்சாவூர்: 569, திருவண்ணாமலை: 374, டி. நகர் (சென்னை): 74, மயிலாடுதுறை: 185, தேனி: 252, திருப்பத்தூர் உட்கோட்டம்: 36, திருப்பத்தூர் வாணியம்பாடி: 35, திருப்பத்தூர் ஆம்பூர் உட்கோட்டம்: 47, தென்காசி: 426, திருச்சி தெற்கு: 147, திருநெல்வேலி சிட்டி: 289.

குண்டர் தடுப்புச் சட்டம்:

தூத்துக்குடி: 366, மதுரை: 100, திண்டுக்கல்: 128, நாகப்பட்டினம்: 119, மதுரை மாநகரம்: 299, தருமபுரி: 20, திருப்பூர் மாநகரம் தலைமையிடம்: 173, கீழ்ப்பாக்கம் (சென்னை): 58, பெரம்பலூர்: 46, திருவாரூர்: 104, சிவகங்கை: 82, திருச்சி: 14, திருப்பூர்: 335, கரூர்: 33, ஈரோடு: 44, புதுக்கோட்டை: 88, சிந்தாதிரிப்பேட்டை (சென்னை): 102, அரியலூர் உட்கோட்டம்: 17, ஜெயகொண்டம்: 21, கிருஷ்ணகிரி: 154, கொளத்தூர் (சென்னை): 127, ராணிப்பேட்டை: 110, கோவை: 120, நீலகிரி: 3, சேலம்: 49, சேலம் மாநகரம்: 568, திருநெல்வேலி உட்கோட்டம்: 876, தஞ்சாவூர்: 290, திருவண்ணாமலை: 86, டி. நகர் (சென்னை): 77, மயிலாடுதுறை: 73, தேனி: 68, திருப்பத்தூர் உட்கோட்டம்: 12, திருப்பத்தூர் வாணியம்பாடி: 29, திருப்பத்தூர் ஆம்பூர் உட்கோட்டம்: 3, தென்காசி: 146, திருச்சி தெற்கு: 181, திருநெல்வேலி சிட்டி: 109.

இதையும் படிங்க:புதை குழியில் தள்ளும் சைபர் க்ரைம் மோசடிகள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details