சென்னை:தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா. இவர் ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலிவுட் படங்களில் குத்தாட்ட பாடல்களால் புகழ் பெற்றவர். இவர் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து, வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். அப்போது, சோனா வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்து குரைக்கவே, சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். அவரைப் பார்த்ததும் இரண்டு மர்ம நபர்களும் அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில், சோனா கூச்சலிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் மேடை சரிந்து விபத்து; நடிகை பிரியங்கா மோகனுக்கு என்னாச்சு? - priyanka mohan