மதுரை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் தூறலாக தொடங்கிய மழை விடாமல் இரவு வரை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் மதுரை மாநகர் மட்டுமன்றி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பொழிவு இருந்தது. இதனால் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மூழ்கின.
குறிப்பாக மதுரை மணி நகரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கர்டர் பாலத்தின் கீழ் பகுதி பள்ளம் என்பதால் மழை நீர் முழுவதும் நிறைந்து காணப்பட்டது. இதற்குள் சென்ற காவல்துறை வாகனம் மற்றும் இன்னொரு காரும் மூழ்கின. அதற்குள் இருந்த நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். நேற்று இரவு 10 மணியளவில் பலத்த இடியுடன் பெய்த கனமழை நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:நாயைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு - மதுரையைக் கலக்கும் போஸ்டர்!