திருநெல்வேலி:தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர். அப்போது பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் முருகையன், “ திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டங்களில் அரசு அலுவலர்களை தரக்குறைவாக பேசுகிறார்.
மேலும் ஒருமையில் பெண் அலுவலர்களை பேசுகிறார். அவர் வருவாய் துறை அலுவலர்கள் மீது பாரபட்சமான பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார். அதை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்களை அச்சுறுத்தல் இன்றி சமூக மக்கள் பணி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
இதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமாரி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.