தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் விபத்து நடந்தால் எப்படி பயணிகளை மீட்பது? - கோவை ரயில் நிலையத்தில் நடந்த ஒத்திகை! - TRAIN ACCIDENT RESCUE REHEARSAL

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும், அவர்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

விபத்து மீட்பு ஒத்திகை
விபத்து மீட்பு ஒத்திகை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 9:35 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சேலம் கோட்டம், கோயம்புத்தூர் ரயில்வே துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் இணைந்து கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும் அவர்களை காப்பாற்றுவது போன்றும் சித்தரித்து ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றை செய்து காட்டினர்.

காயமடைந்தவர்கள் போன்று நடித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பது, மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற செயல்பாடுகள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரயில் விபத்து மீட்பு ஒத்திகை வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க :வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை: சென்னை உயர் நீதிமன்றம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 40 தடவை ரயில் விபத்துக்கள் நடக்கின்றன. இந்த மாதிரி ரயில் விபத்துக்களின் போது ஒவ்வொரு துறைகளும் எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒத்திகை தான் இது.

இந்த ஒத்திகையை தெற்கு ரயில்வே, தனியார் மருத்துவமனை, காவல்துறை இணைந்து நடத்துகின்றது. விபத்து நடைபெறும் நேரத்தில் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதும் இந்த ஒத்திகையில் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் மூலம் வரும்காலங்களில் விபத்து நேரங்களில் உயிரிழப்புகளை தடுக்க முடியும். ரயில் விபத்து ஏற்பட்டால் மக்கள் பயப்படக்கூடாது. உடனடியாக மக்கள் ரயில்வே துறை மற்றும் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

சமீபத்தில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது குறித்தான கேள்விக்கு, பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமாக IP Address கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். Microsoft நிறுவனத்தின் உதவியுடன் அந்த பணிகள் மேற்கொண்டு வருகிறோம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details