தமிழ்நாடு

tamil nadu

அரசு பள்ளி ஹைடெக் ஆய்வகங்களுக்கு 8,209 மேற்பார்வை பணியாளர்களை தற்காலிகமாக நியமிக்க திட்டம்! - Recruitment in Hi Tech Laboratories

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 9:25 PM IST

Hi-Tech Laboratories: தமிழ்நாட்டில் 8,209 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ஆய்வங்களில் பணிபுரிய தற்காலிகமாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Students
பள்ளி மாணவிகள் (Credits - TN School Education Department website)

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 10 கம்ப்யூட்டர்களும் கொண்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைக் கடந்த ஐந்தாண்டுகளாக எல் & டி நிர்வாகம் பராமரித்து வந்தது. அதனுடைய பராமரிப்பு காலம் முடிந்து விட்டது.

அதனைத் தொடர்ந்து பராமரிக்கவும், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியை கற்றுத் தரவும் கம்ப்யூட்டர் தெரிந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசுப் பள்ளிகளில் இருக்கின்ற 8,209 ஹை டெக் ஆய்வகங்களில் பயிற்றுநர் மற்றும் மேலாண்மை பணிகளுக்கு 8,209 பணியாளர்களை நியமனம் செய்ய ஒருங்கிணைந்த மாநில கல்வித் திட்ட இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனம் ஹைடெக் ஆய்வகம் மற்றும் அதற்கான பணியாளர்களை நியமிக்க இருக்கின்றது. முதலில் மொபைல் போன் மூலம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பயிற்றுநர்களுக்கான கணினி வழி தேர்வு வரும் 5ஆம் தேதி அந்தந்த பள்ளிகளில் நடைபெற உள்ளதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனர் (சமக்ர சிக்ஷா இயக்குனர்) ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஹைடெக் ஆய்வகங்களில் 60 மாதங்கள் வரை பயிற்றுநர்கள், ஹைடெக் ஆய்வக மேற்பார்வை பணிகளில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“ஆண்டுக்கொரு பிரதமர் என நான் கூறினேனா?” - திருமாவளவன் விளக்கம்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details