சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினம் மே 21ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மேலும், ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று, பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜுவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர்களான திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு, விஜய் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அவ்வளாகத்தில் வீணைக் கச்சேரி மூலம் புகழ் இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வினைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாசிக்க அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.