கோயம்புத்தூர்:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்தேசிய கட்சித் தலைவர்கள் தமிழகம் வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கோவை செட்டிபாளையம் பகுதியில் நேற்று இண்டியா கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்விற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த ராகுல் காந்தி சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சிங்காநல்லூர் பகுதியில் வாகனத்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி டிவைடரை தாண்டி அங்கிருந்த இனிப்பு கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கி பணியாளர்களுடன் உரையாடி புகைப்படம் எடுத்து கொண்டார்.
பிரச்சாரத்திற்காக கோவை வந்த ராகுல் காந்தி, எதிர்பாராத விதமாக இனிப்பு கடைக்கு சென்று இனிப்பு பண்டங்களை வாங்கியது, அந்த கடை ஊழியர்களை நெகிழச்சியடைய செய்துள்ளது. இது குறித்து பேசிய கடை ஊழியர் பாபு, நேற்று எதிர்பாராத விதமாக ராகுல்காந்தி , டிவைடரை தாண்டி கடைக்கு வந்தார். நாங்கள் வேறு யாரோ அரசியல்வாதி தான் வருகிறார்கள் என்று நினைத்தோம், ஆனால ராகுல் காந்தி வந்தார்.