தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இன்று இல்லாவிட்டால் நாளை வெற்றி பெறுவோம்" வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி! - dr krishnasamy - DR KRISHNASAMY

dr krishnasamy: டாக்டர்.கிருஷ்ணசாமி, வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

புதிய தமிழகம் கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
புதிய தமிழகம் கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 9:33 AM IST

தென்காசி:நடந்த முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி 2 லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்குகள் பெற்றார். அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 22 சதவீதம் ஓட்டுகளை பெற்று வெற்றி வாய்பை இழந்தார்.

இந்த முறையுடன் சேர்த்து டாக்டர். கிருஷ்ணசாமி தென்காசி மக்களவை தொகுதியில் தொடர்ந்து 7 முறை போட்டியிட்டார். கடந்த 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் தென்காசி தொகுதியை குறிவைத்துப் போட்டியிட்ட அவர் அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தென்காசி முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், "இன்று இல்லாவிட்டாலும்! நாளை நிச்சயம் ஒட்டுமொத்த மனங்களையும் வென்றெடுப்போம்! வெற்றி பெறுவோம்!.. இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்காள பெருமக்களுக்கும் நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விக்ரவாண்டி இடைத் தேர்தல் புறக்கணிப்பு - அதிமுக அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details