தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரி பள்ளிகளில் நாளை முதல் கோடை விடுமுறை.. மீண்டும் திறப்பு எப்போது? - Puducherry Schools summer holiday - PUDUCHERRY SCHOOLS SUMMER HOLIDAY

Puducherry Schools summer leave: புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 29ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 7:36 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ விதிகளின்படி, முழு ஆண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நடந்து வருகிறது.

மே 1ஆம் தேதி முதல் ஜூன் வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வெயிலின் தாக்கம் புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 29, 30 தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வருகிற 29ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசுப் பள்ளிகள் இயங்காது. அதனால் நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை! - School Reopen Date

ABOUT THE AUTHOR

...view details