சென்னை:சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள ஆன்மிக திவ்ய பாசுரங்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியின் நாயகனாக இளையராஜா கலந்து கொண்டார்.
இசை அமைப்பாளர் இளையராஜா தமிழ் திரையுலகின் இசை கடவுளாகவே பார்க்கப்படுகிறார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர், தலைமுறைகள் கடந்தும் இசை ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருபவர். திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி ஆன்மிக பாடல்கள், சிம்பொனி இசை, திருவாசகம் உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆன்மிக திவ்ய பாசுரங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்,
இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா பாசுரங்களை வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், "இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு அன்பான உள்ளங்களை சந்திப்பது பல்லாண்டு பல்லாண்டு நீண்டு கொண்டே போக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.