தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இரண்டாண்டுகளாக ஆர்டிஇ பள்ளிக் கட்டணம் வழங்கப்படவில்லை"- அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை! - RTE PRIVATE SCHOOL FEES

தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ கல்விக் கட்டணம் 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை; அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

தனியார் பள்ளிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம்
தனியார் பள்ளிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 4:00 PM IST

சென்னை:தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைபப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளியில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைபப்பின் மாநிலத் தலைவர் ஆறுமுகம், மாநில செயலாளர் முத்துராமலிங்கம், மாநிலப் பொருளாளர் ராமக்கிருஷ்ணன் உள்ளிட்ட பள்ளி தாளாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க:முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடு; வியப்பில் அண்டை மாநிலங்கள் - அமைச்சர் ரகுபதி பேச்சு

  1. தமிழகத்தில் நீண்ட காலமாக நடத்தி வரும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் (Nursery & Primary School) உரிய தகுதிகள் உள்ள பள்ளிகளுக்கு 8-ஆம் வகுப்புவரை ( Middle School ) தரம் உயர்த்தி தர ( Upgrade) ஆவண செய்ய வேண்டும்.
  2. தமிழகத்தில் பல ஆயிரம் பள்ளிகள் தொடக்க அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்நிலை 10 ஆண்டுகள் நிறைவடைந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition ) வழங்க இந்தாண்டிலேயே அறிவிக்க வேண்டும்.
  3. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இருப்பதுபோல், தனியார் பள்ளிகளுக்கும், தாளாளர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு சட்டம் ஒன்று ஏற்படுத்த வேண்டும்.
  4. பெருநகர வளர்ச்சித் திட்ட வரையறையின் படி திட்டமிட்டப் பகுதி மற்றி திட்டமிடாப்பகுதியில் (Planning & Non Planning Area) உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நகர ஊரமைப்பு திட்ட அனுமதி பெறுதல் ( Directorate Of Town And Country Planning Concurrence Order ) வழங்க வேண்டும்.
  5. இலவச கட்டாயக் கல்விக் கட்டணம் 2 வருடங்களுக்கான பள்ளிகளுக்கு வழங்கப்படாததால் பள்ளிகள் மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் சுமூகமாக செயல்பட இயலாத நிலை உள்ளது. சுமார் 8,000 தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து வரும் சுமார் 4.5 லட்சம் மாணவர்களின் 2023 -24 மற்றும் 2024-25 ஆம் கல்வி ஆண்டுகளுக்கான சுமார் 1,000 கோடி (Reimbursement Fees) கல்விக் கட்டணத்தை விரைவில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இந்த தொகை வழங்க தாமதமாவதால் சுமார் 2 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சரிவர சம்பளம் வழங்க இயலாத நிலை மற்றும் பள்ளிகளுக்கான அத்தியாவசிய செலவினங்களை கூட செய்ய இயலாத நிலை உள்ளது.
  6. பள்ளிகளில் பாடத்தில் மட்டும் அல்லாது விளையாட்டுகளிலும் மாணவர்களையும் தமிழ்நாடு அரசு ஈடுபடுத்த வேண்டும்.
  7. மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை ஆண்டுக்கு ஒருமுறை சங்கத்தின் சார்பில் நடத்தப்படும்.
  8. ஒரு பள்ளியில் படித்த மாணவர் அப்பள்ளியில் கல்விக் கட்டணப் பாக்கியை வைத்துவிட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்காமலே வேறு பள்ளி சேர்க்கைக்கு செல்லும்போது, கடைசியாக படித்த பள்ளியில் No Objection Certificate (NOC) வாங்கி வரவேண்டும் என அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு வைத்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details