தூத்துக்குடி:தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஐகோர்ட் மகாராஜா (30) என்பவர், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்து பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், கடந்த மார்ச் 5ஆம் தேதி தூத்துக்குடி பேரூரணி சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக கைதி, விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்த போது, மகாராஜா கைதி போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா மேற்பார்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தில் வேல்குமார் தலைமையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பிரெட்ரிக் ராஜன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன், ஏரல் காவல் நிலைய தலைமைக் காவலர் காசி, காடல்குடி காவல் நிலைய காவலர் பிரபுபாண்டியன், கடம்பூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் வடபாகம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபெருமாள், தலைமைக் காவலர் சண்முகநாதன், முதல் நிலை காவலர் முத்தமிழ்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மகாராஜாவை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.