தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் தகனம்! - Pregnant Women Body Cremated - PREGNANT WOMEN BODY CREMATED

Pregnant Women Body Cremated In Chennai: உளுந்தூர்பேட்டை அருகே கொல்லம் விரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்த கர்ப்பிணியின் உடல் சென்னை திரிசூலம் பகுதியில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

கஸ்தூரி புகைப்படம்
கஸ்தூரி புகைப்படம் (credit to etv bharat tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 5:16 PM IST

சென்னை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சுரேஷ் - கஸ்தூரி தம்பதியி. கஸ்தூரியின் வளைகாப்பு விழாவிற்காக, நேற்று முன்தினம் (மே 2) அவர்களது சொந்த ஊருக்குச் செல்வதற்கு சென்னையிலிருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அப்போது, ரயில் இரவு நேரத்தில் உளுந்தூர்பேட்டை கடந்து சென்று கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. இதையடுத்து, அவர் ரயில் பெட்டியில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது கழிவறை கதவு பூட்டப்பட்டதால், அருகில் இருந்த படியில் அமர்ந்து கொண்டு வாந்தி எடுத்து உள்ளார்.

அதன்பின், கஸ்தூரி எழுந்து ரயிலின் உள்ளே வர முயன்ற பொழுது நிலை தடுமாறி ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர், உடனே ரயில் பெட்டியிலிருந்த அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளார். ஆனால், ரயில் நிற்காமல் எட்டு கிலோமீட்டர் தூரம் தள்ளிச் சென்று நின்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கஸ்தூரி உயிரிழந்துள்ளார். பின்னர், ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நேற்று (மே 3) மாலை விருத்தாச்சலத்தில் இருந்து சென்னை திரிசூலம் பகுதியில் உள்ள அவர்கள் வீட்டிற்கு கஸ்தூரியின் உடல் கொண்டு வரப்பட்டது. நேற்றிரவு முதல் அவருடைய உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், இன்று (மே 4) திரிசூலம் பகுதியில் உள்ள இடுகாட்டில் கஸ்தூரியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:புதிய பாம்பன் பாலம் எப்போது தயாராகும்? - தெற்கு ரயில்வே கூறுவது என்ன? - New Pamban Bridge Construction

ABOUT THE AUTHOR

...view details