தஞ்சாவூர்:திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோயிலில், கிராம மக்கள் மற்றும் ஓம் நமச்சிவாய பக்தர் குழுவினரின் கோரிக்கையை ஏற்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் கூடியிருந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே கோயில் தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கூறுகையில், “திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சிவகாமி அம்மன் பஞ்சலோக செப்பு திருமேனி சிலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்டு, மும்பை வழியாக அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.