தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவினர் திமுகவை நாடுகின்றனரா? பொள்ளாச்சி ஜெயராமன் அதிர்ச்சி பதில்! - Pollachi Jayaraman - POLLACHI JAYARAMAN

Pollachi Jeyaraman: தற்போது தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் தொடர் கொலைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 4:04 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆறு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் ரிப்பன் வெட்டி, நிழற்குடையை பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவை தோல்வி எனச் சொல்ல முடியாது எனவும், 2011ல் இருந்து 2021 வரை திமுக எங்கே இருந்தது எனத் தெரியாமல் இருந்ததாகவும், 2021-ல் திமுக திடீரென ஆட்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்றுதான் எனவும், அதில் அதிமுகவுக்கு விலக்கு இல்லை என்பதையும் கூறினார். இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் அதிமுக மிகப்பெரிய கட்சி எனவும், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் எனக் கூறினார்.

மேலும், அவருடைய நான்காண்டு கால ஆட்சியை தமிழக மக்கள் உணர்ந்து இருப்பதால், அவருக்கு நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என்றும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெறும் என உறுதியளித்தார். திமுகவின் ஊழல்களைப் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும், அதிமுக ஊழலை எதிர்த்து தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம் எனவும் கூறினார். அதிமுகவினர் திமுகவில் இணையும் நிர்பந்தமான சூழல் ஒருபோதும் ஏற்படாது என்பதையும் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலத்தில் தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பல படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், கொலைகள் நடைபெறுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும், அதற்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்த திமுக அமைச்சர்.. முதலமைச்சர் நன்றாக அரவணிப்பார் என உறுதி!

ABOUT THE AUTHOR

...view details