சென்னை: மதுரவாயல் அடுத்த வானகரம், நூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா (22). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் போரூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில், போரூரில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவர் மீன் குழம்பு சாப்பிட்டு உள்ளார். இதனையடுத்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் விசாரணை திருப்தியாக இல்லை" - பகுஜன் சமாஜ் கட்சியினர் பகிரங்க குற்றச்சாட்டு