தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென இடிந்து விழுந்த காவலர் குடியிருப்பு கட்டடம் … மற்ற கட்டிடங்களை சரி செய்ய காவலர்கள் கோரிக்கை - Police quarters building collapse - POLICE QUARTERS BUILDING COLLAPSE

Police quarters building collapse: சென்னையில் காவலர் குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த நிலையில், அங்குள்ள மற்ற பழுதடைந்த கட்டிடத்தை சரி செய்து தர கூறி காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையில் திடீரென இடிந்து விழுந்த காவலர் குடியிருப்பு கட்டிடம்
சென்னையில் திடீரென இடிந்து விழுந்த காவலர் குடியிருப்பு கட்டிடம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 6:33 PM IST

சென்னை: கிண்டியில் புனித தோமையர்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலந்தூர் காவலர் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. அதில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் காவல் குடியிருப்பு வளாகத்தின் 15வது பிளாக் மொட்டை மாடியில் உள்ள சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுச் சுற்று சுவர் இடிந்து திடீரென கீழே விழுந்துள்ளது.

சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் நூலிழைலில் உயிர் தப்பியதாக அங்குள்ள காவலர் குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும் காவலர் குடியிருப்பில் உள்ள மற்ற கட்டிடங்களும் இது போலவே விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில் உள்ளது.

இதனைதொடர்ந்து இது போன்று சம்பவம் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் காவலர் குடியிருப்பு பராமரிப்பு காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இணைந்து அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதையும் படிங்க: மத்திய சென்னையில் பதற்றமான சாவடிகள்! அதிமுக அளித்த அவசர மனு - Sensational Election Booth List

ABOUT THE AUTHOR

...view details