சென்னை:திருமணத்தை தாண்டிய உறவு விவகாரத்தில், கணவரை மனைவியின் ஆண் நண்பர் கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 3வது செக்டாரைச் சேர்ந்தவர் மைக்கேல் துரைபாண்டியன் (52). இவரது மனைவி பொன்மாலா. பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே துரைபாண்டியன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினர்.