தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. புத்தாண்டை முன்னிட்டு சாலைகளில் மாற்றம் - முழு விவரம் உள்ளே! - NEW YEAR CELEBRATIONS

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சென்னையில் உள்ள பல்வேறு சாலைகள், மேம்பாலங்களில் போக்குவரத்து தடை மற்றும் மாற்றம் செய்து தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2024, 7:28 AM IST

சென்னை:ஆங்கிலப் புத்தாண்டை (New Year 2025) வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று இரவு (டிச.31) முதல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கவும் தமிழக காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறையானது, இப்புத்தாண்டினை விபத்து இல்லாத கொண்டாட்டங்களாக இருப்பதை உறுதி செய்ய சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான சிரமங்களைத் தவிர்க்க பின்வரும் போக்குவரத்து மாற்றங்களும், வாகன செயல்படுத்தப்பட உள்ளன. நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளும் முன்மொழியப்பட்டுள்ளது.

காமராஜர் சாலை மற்றும் எலியாட் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

  • கடற்கரை உட்புற சாலை டிசம்பர் 31 இரவு 19:00 மணி முதல் ஜனவரி 1 காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 19:00 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும், அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
  • காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை டிசம்பர் 31 இரவு 20:00 மணி முதல் ஜனவரி 1 காலை 06.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
  • அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
  • டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
  • பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை. முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
  • வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. சுவாமி சிவானந்தா சாலை. (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில்) பாரதி சாலை விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை, நடேசன் சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பு வரை அனுமதி இல்லை.
  • தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
  • கொடிமரச் சாலையில், இரவு 20:00 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
  • கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர்கே மட் யூ-திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவநாதன் தெரு, ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெரு (சாய்பாபா கோயில்), நாகேஸ்வர பூங்கா வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆ.ர்.பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி, கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி சந்திப்பு வழியாக வாலாஜா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.
  • மேலும், அனைத்து மேம்பாலங்களும் டிசம்பர் 31 இரவு 22:00 மணி முதல் ஜனவரி 1 காலை 06:00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.

காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

  • சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • தீவுத்திடல் மைதானம்
  • பொதுப்பணித்துறை மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
  • பிரஸ் கிளப் சாலை
  • பொதுப்பணித்துறை வளாகம் காவல்துறை வாகனங்கள் மட்டும்
  • கலைவாணர் அரங்கம்
  • விக்டோரியா விடுதி
  • பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை பாரதி சாலை சந்திப்பில் இருந்து - ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • லாயிட்ஸ் சாலை (மாற்று திறன் ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் நடேசன் சாலையை நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • இராணி மேரி கல்லூரி வளாகம்
  • லேடி வெலிங்டன் பள்ளி
  • NKT பள்ளி
  • டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • பரத் சாரணர் வளாகம்
  • தெற்கு கால்வாய் சாலை (மந்தவெளி நோக்கி)
  • தெற்கு கால்வாய் சாலை (பட்டினம்பாக்கம் நோக்கி)

எலியாட் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

  • டிசம்பர் 31 இரவு 20:00 மணி முதல் ஜனவரி 01 காலை 06:00 மணி வரை 6-வது அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
  • 6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு, 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

எலியாட் கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தத்திற்கான செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

  • பெசன்ட் நகர் 4வது அவென்யூவில் ஒரு பக்கம் ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 3வது மெயின் ரோட்டில் ஒரு பக்கம் வாகன நிறுத்தம் ஒற்றை வரிசை
  • பெசன்ட் நகர் 4வது மெயின் ரோட்டில் ஒரு பக்கம் வாகன நிறுத்தம் ஒற்றை வரிசை
  • பெசன்ட் நகர் 5வது அவென்யூவில் ஒரு பக்கம் நிறுத்தம் ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 2 வது அவென்யூவில் ஒரு பக்கம் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 3 வது அவென்யூவில் ஒரு பக்கம் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • ஆல்காட் பள்ளி, பெசன்ட் நகர்

மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, ANPR கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. இக்கேமராக்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல் / குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் / சாகச சவாரி செய்தல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து, புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடுவதுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மூடப்படும் மேம்பாலங்கள்:

  • மியூசிக் அகாடமி மேம்பாலம்
  • புதிய வள்ளலார் பாலம்
  • ஜெமினி மேம்பாலம்
  • ஜிஆர்எச் மேம்பாலம்
  • ஜிகேஎம் மேம்பாலம்
  • அண்ணா ஆர்ச் மேம்பாலம்
  • பீட்டர்ஸ் சாலை மேம்பாலம்
  • வாணி மஹால் மேம்பாலம்
  • 100 அடி சாலை
  • மேம்பாலம்
  • ஆழ்வார்பேட்டை மேம்பாலம்
  • உஸ்மான் மேம்பாலம்
  • திருமங்கலம் பாலம்
  • காந்தி மண்டபம் மேம்பாலம்
  • முரசொலி மாறன் மேம்பாலம்
  • இந்திரா நகர் U-திருப்பம்
  • பாந்தியன் மேம்பாலம்
  • ரெங்கராஜபிரம் மேம்பாலம்
  • வடபழனி மேம்பாலம்
  • மகாலிங்கபுரம் மேம்பாலம்
  • அடையார் மேம்பாலம்
  • வேளச்சேரி மேம்பாலம்
  • விமான நிலைய மேம்பாலம்

ABOUT THE AUTHOR

...view details