சென்னை: நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக ஆளுநர் உரை அமைய வேண்டும் எனவும் பேரவை தலைவர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும் அடிப்படை வாழ்வுரிமை என்பது சமூக நீதி. அதன் அங்கம் இட ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும். சமூக நீதி அக்கறை இருக்கிறது என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.
ஆளுநர் உரையில் ஏமாற்றம்:
நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக ஆளுநர் உரை அமைய வேண்டும். ஆனால், பாசனம் திட்டங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி திட்டங்கள், கல்வி திட்டங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டங்கள் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெற வில்லை.