ETV Bharat / state

“இந்த பகுதியில் பீப் பிரியாணி கடை இருக்க கூடாது”- வைரலான வீடியோ காட்சி... நடந்தது என்ன? - BEEF ISSUE IN COIMBATORE

கோயம்புத்தூரில் பீப் பிரியாணி விற்பனை செய்த தம்பதியை சிலர் கடுமையாக பேசி கடையை அகற்றுமாறு தெரிவித்த வீடியோ வெளியான நிலையில் உண்மை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பீப் பிரியாணி கடைகாரர்கள், பாஜக நிர்வாகி சுப்பிரமணி
பீப் பிரியாணி கடைகாரர்கள், பாஜக நிர்வாகி சுப்பிரமணி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி கடை நடத்தி வருபவர்கள் ரவி - ஆபிதா தம்பதி. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த சிலர் இங்கு கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் இறைச்சி விற்றுக்கலாம் ஆனால் பீப் எனப்படும் மாட்டு இறைச்சியை விற்க கூடாது என மிரட்டும் விடியோ காட்சி சமூக ஊடங்களில் வைரலானது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பீப் பிரியாணி கடை நடத்துநரான ரவி கூறுகையில், “நாங்கள் இந்த பகுதியில் 12 நாட்களாக கடை நடத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக நிர்வாகி சுப்பிரமணி என்பவர் எங்கள் கடைக்கு வந்து இங்கு பீப் விற்க கூடாது என மிரட்டினார். நாங்கள் ஏன்? விற்க கூடாது இந்த பகுதியில் அதிகளவிலான சிக்கன், மீன், மட்டன் உணவகங்கள் உள்ளன, அதேபோல் நாங்களும் விற்கிறோம் என்றேன். அதற்கு அவர் இங்கு கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகில் பீப் கடை இருக்க கூடாது. சாமிக்கு ஆகாது என்றார். மேலும் சிக்கன், மீன் கடை இருந்தால் பரவாயில்லை ஆனால் பீப் இருக்க கூடாது என்றார்.

இதையடுத்து நாங்கள் கவுன்சிலரிடம் அனுமதி பெற்று அதே இடத்தில் கடை நடத்தினோம். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் (ஜனவரி 6) பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீண்டும் கடைக்கு வந்து தகாத வார்த்தைகளால் எங்களை பேசினார். மேலும் கடையை காலி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என தெரியாது எனக்கூறி ஆட்களை வைத்து மிரட்டினார். அப்போது கவுன்சிலரிடம் மீண்டும் இது குறித்து கேட்டோம். அதற்கு அவர் இந்த பகுதியில் இனி சிக்கன், மீன், மட்டன் என எந்த கடையும் இருக்காது. நீங்களும் அந்த இடத்தில் கடையை வைக்க வேண்டாம் என்றார்.

முன்னதாக இணையத்தில் வைரலான விடியோ காட்சி (ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து தற்போது அங்கிருந்து தள்ளி வந்து, மூன்று சந்திப்பு என்னும் இடத்தில் கடையை வைத்துள்ளோம். நாங்கள் அன்று சுப்பிரமணி எங்களை மிரட்டியதை விடியோ எடுத்து சமூக ஊடங்களில் வெளியிட்டோம். அதைப் பார்த்து சரவணம்பட்டி காவல் துறையினர் வந்தனர். ஆனால் நாங்கள் புகார் கொடுக்கவில்லை. இனி இது போன்று மிரட்டலோ, அச்சுறுத்தலோ இருந்தால் உடனடியாக சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் அணுக கூறினார்கள். இந்த பிரச்னைக்கு காரணம் சாதி தான் என நினைக்கிறேன். நான் என் வருமானத்திற்காக இதை செய்கிறேன் ஆனால் நான் யாரையும் வற்புறுத்தி பீப் சாப்பிட சொல்லவில்லை. பிடித்தவர்கள் சாப்பிலாம்” என்றார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி பள்ளி மாணவி மரண வழக்கு; ஜாமீன் கோரிய மூவரின் மனுக்களும் தள்ளுபடி..! -

இதையடுத்து பேசிய ரவியின் மனைவி ஆபிதா, “இந்த பகுதியில் பல சிக்கன் மற்றும் மீன் உணவகங்கள் உள்ளன. ஆனால் பீப் மட்டும் விற்க கூடாது என பாஜக நிர்வாகி மிரட்டுவது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர் சில ஆட்களுடன் கடைக்கு வந்து தாகாத வார்த்தைகளால் திட்டினார். அதனால் அன்று எங்களுக்கு ரூ.3000 வரை நட்டம் ஏற்பட்டது”.

சம்பந்தப்பட்டவர்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இது குறித்து பேசிய பாஜக நிர்வாகி சுப்பிரமணி, “எங்கள் ஊருக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு கோயில் இருக்கும் வழியில் பீப், சிக்கன் போன்ற இறைச்சி விற்கப்படுகிறது. இந்த கடைகளில் மது அருந்தியவர்கள் அதிகளவில் வந்து சாப்பிடுவதால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மது அருந்தி விட்டு வருபவர்கள் பைக் போன்ற வாகனங்களை சாலை நடுவே நிறுத்துகின்றனர். அதனால் அதை அகற்ற கூறும் போது பெரும் சண்டை ஏற்படுகிறது. குடிபோதையில் ஆட்களை அழைத்து வந்து பெரிய சண்டைகள் நடக்கின்றன.

இவற்றை தவிர்த்தப்பதற்காக தான் இறைச்சி கடைகளை எடுக்க கூறினோம். பீப் கடை மட்டுமல்ல அனைத்து கடைகளையும் தான் எடுக்க கூறினோம். இட்லி தோசை என்ற சைவ உணவு கடைகளை வைத்தால் நன்று என தான் கூறினோம். வேறு உள்நோக்கத்துடன் எதும் கூறவில்லை” என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.