சென்னை:சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் கடந்த 2017ஆம் தேதி இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கியில் சுமார் 240 கோடி கடன் பெற்றது. இந்த கடனை முறைகேடாக பெற்று மோசடி செய்துள்ளதாக இந்தியன் வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா, சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை ஈடுபட்டதாக அமலக்கதுறை கடந்த 2022இல் சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களும், பங்குதாரர்களுமான ஒய்.பி.ஸ்ரிவன் (Y.P.Shiravan), பி. சுஜாதா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.